
கல்வி கற்கும் ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வி உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தனது பொறுப்பாகும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறுகிறார்.2017 ம் ஆண்டில் முதலாம் தரத்துக்கு பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தேசிய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.கிரிபத்கொடை விகார மகாதேவி மகளிர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற இந்த விழாவில் மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், முதலாம் ஆண்டில் பிள்ளைகளை சேர்க்கும் போது சில பிரபல பாடசாலைகளால் மேற்கொள்ளப்படும் முறைகேடான செயல்களை கண்டறிய தற்போது விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.கொழும்பு றோயல் கல்லூரி போன்று தலைநகரிலும் வேறு பல பாடசாலைகளிலும் இம்முறை முதலாம் ஆண்ட்டில் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்வது சம்பந்தமாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று குறப்பிட்ட அமைச்சர் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ள பாடசாலைகள் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தவறு செய்தவர்களுக்கு அவர்களது தராதரம் பார்க்காது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சில தனி நபர்களின் வஞ்சனையான செயல்கள் காரணமாக உண்மையாகவே பாடசாலையில் சேர்த்துக்கொள்ளப்படுதற்கு தகைமை கொண்டுள்ள பிள்ளைகளுக்கும் கல்வி வசதி இல்லாமல போகின்றது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் தான் நிரந்தரமாக நீதி மற்றும் ஒப்புரவு பக்கம் நிற்பதாகவும் அதற்கு சவாலாக இருக்கும் எந்தவொரு சக்திக்கும் தான் கீழ்ப் பணியப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.கிரிபத்கொடை விகார மகாதேவி மகளிர் வித்தியாலயத்தில் சேரும் பல பிள்ளைகளை உத்தியோகபூர்வமாக சேர்வுப் பதிவேட்டில் பதிவது அமைச்சரின் தலைமையில் இடம் பெற்றது. அத்துடன் முதலாம் ஆண்டு பிள்ளைகளுக்கு இலவாச பாடநூல் வழங்கலும் இடம் பெற்றது.

இந்த விழாவுக்கு பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே. இராதாகிருஷ்ணன் உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அலுவலர்கள் உட்பட பெரும் தொகையானோர் கலந்து சிறப்பித்தனர்.இம்முறை நாடு முழுவதும் முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாகும்.
http://www.moe.gov.lk/
No comments: